பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் உரிய சேவையை வழங்க முடியவில்லை என புகார்.
பொது விநியோகத் திட்டத்தில் தொழில் நுட்ப குறைபாடுகளால் உரிய சேவையை வழங்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறைபாடுகளை சரிசெய்ய கோரி வரும் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.