மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது வாகனம் மோதியுள்ளது.
மியான்மர் நாட்டின் ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் கைப்பற்றியுள்ளது. அவ்வாறு ராணுவம் மியான்மர் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டிலுள்ள பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி மியான்மரிலுள்ள யாங்கூன் என்னும் பகுதியில் அந்நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அப்போது அவர்களுக்கு பின்புறமாக வந்த ராணுவ வாகனம் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது சரமாரியாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.