தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிப்பு ஜூன் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு என்பது வழக்கமாக மே மாதம் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அந்த பணி தாமதமாகி இருக்கிறது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரம் 27ம் தேதி துவங்கி ஜூன் 10-ஆம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு ஜூன் 10ம் தேதியில் இருந்து பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து பணிகளையும் இந்த கலந்தாய்வை நடத்த கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனர் குழு செய்துள்ளன. கிட்டத்தட்ட 45 நாட்கள் இந்த ஆன்லைன் பதிவு செய்வதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட உள்ளன.
ஜூலை மாதம் சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில தேர்வுகள் நடைபெற இருகின்றன.அந்த மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு இந்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 500 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,75,000 இடங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டே கிட்டத்தட்ட 1.50 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 1.33 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறியியல் சேர்க்கைக்காண ஆன்லைன் பதிவு தீவிரமாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் குழு நடந்திவருகின்றன.