Categories
உலக செய்திகள்

“பேச்சு மாற கூடாது”…. தனது இலக்கை மாற்றிய ரஷ்யா…. 2100 பொதுமக்கள் பலி….!!

ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரேன் போரானது இன்றுடன் 21வது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய போதும் தலைநகரமான கீவ்வை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் அதனை கண்டுகொல்லாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தனது தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2100 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  மேலும் மரியுபோல் நகரத்தில் நேற்று முன்தினம் மட்டும் சுமார் 22 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மக்கள் குடியிருப்பு பகுதிகளை கவனத்தில் வைத்து ரஷ்யா படைகள் குண்டு வீச்சு நடத்தி வருகின்றது.

முன்னதாக உக்ரைன் ராணுவ வீரர்கள் மட்டுமே தனது இலக்கு என்று போரை தொடங்கிய ரஷ்யா தற்போது குடியிருப்பு பகுதிகளில் தனது தாக்குதலை நடத்தி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த போரானது 20 நாட்களை கடந்துள்ளதால் மின்சாரம் தண்ணீர் மற்றும் வெப்பமூட்டும் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் இல்லை என்றும் மொபைல் போன் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |