ராணுவ போரின் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கூறியதாக கே.சி.என் ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரிய தொழிலாளர் கட்சியின் சார்பாக மத்திய ராணுவ ஆணையத்தின் 2 ஆவது கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் கிங் ஜாங்-உன் பேசியதாவது, வடகொரிய நாட்டு ராணுவப் படையினர்கள் போர் புரியும் செயல்திறனை சற்று அதிகமாக மேம்படுத்த வேண்டும் என்றுள்ளார். மேலும் வடகொரியாவின் பாதுகாப்பையும் இறையாண்மையையும், ராணுவப்படையினர்கள் வலுவாக பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து வடகொரியாவிலிருக்கும் ஆயுதப்படைகளின் வளர்ச்சியை உயர்த்துவது குறித்தும் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராணுவ துறையினர்கள் தெளிவான சில முக்கியமான நோக்கங்களை அமைப்பதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும் தேவைப்படுகின்ற திட்டங்களையும் வகுத்துள்ளார். இதோடு மட்டுமல்லாமல் வடகொரிய ராணுவ துறை எந்த நிலையில் இருக்கிறது என்பதனை கிம் ஜாங் உன் ஆய்வு செய்துள்ளார். இந்த தகவலை கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.