பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு வழங்கப்படும் சம்பளம் 1,57,000 பவுண்டுகள் போதவில்லை என்று புலம்புவதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்ற பின்பு தன் வருமானத்தில் அதிகமான தொகையை இழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் போரிஸ் ஜான்சனுக்கு முன்னணி பத்திரிக்கையில் வாரந்தோறும் ஒவ்வொரு கட்டுரைக்கு என்று வருடத்திற்கு 2,75,000 பவுண்டுகள் சம்பளமாக கிடைத்து வந்தது.
ஆனால், பிரதமரான பின்பு, போரிஸ் ஜான்சன் அந்த சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அவரின் முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளதால் அவரின் சேமிப்பில் அதிகமான பணம் அதற்காக செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக செலவுகள் ஏற்படுவதால் ஊதியம் தனக்கு பத்தவில்லை என்று கூறிவருகிறார்.
மேலும் அவர் இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த போது, இருவருக்குமான வீட்டை, 3.35 மில்லியன் பவுண்டுகளுக்கு அவர் தான் விற்றுள்ளார். எனினும், தன் புது மனைவிக்கு, லண்டனின் தெற்கு பகுதியில், 1.2 மில்லியன் பவுண்டுகளுக்கு ஒரு இல்லத்தை வாங்கியிருக்கிறார். மேலும் Oxfordshire-ல் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்.
அதன் மூலம், மாதந்தோறும், 4250 பவுண்டுகள் கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல் Exmoor பகுதியில் இருக்கும் ஜோன்சன் குடும்ப வீட்டில், 20 சதவீதம் பங்கு பிரதமருக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.