பிரித்தானியாவின் போர்க்கப்பல் இன்னொரு முறை தங்களுடைய எல்லைப் பகுதிக்குள் நுழைந்தால், அந்நாட்டின் கடற்படைத் தளங்களை குண்டு வீசி தாக்கும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தினுடைய Royel Navy Destroyer Defender என்னும் போர்க்கப்பல் கருங்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது இங்கிலாந்தின் போர் கப்பல் கடலில் இருக்கும் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்ததாக ரஷ்ய நாடு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டினுடைய போர்க்கப்பல் “இன்னொரு முறை ரஷ்ய எல்லையை மீறினால்”, கருங்கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து நாட்டிற்கான கடற்படை தளங்களை குண்டு வீசி தாக்குவோம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இதனை ஏற்க மறுக்கும் இங்கிலாந்து கடற்படை, சர்வதேச நாடுகளுடன் ஒப்புக்கொண்டுள்ள உக்ரைன் எல்லையில் தான் தாங்கள் ரோந்து சென்றதாக தகவல்களை வெளியிட்டுள்ளது.