பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் இருக்கும் தகவல் திரையில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விமானங்களின் வருகை தொடர்பான தகவல்களை தெரிவிக்க கூடிய திரையில் திடீரென்று ஆபாசப்படம் ஒளிபரப்பாகியது. இது பயணிகளையும் விமான நிலைய பணியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பயணிகள் சிலர் அதனை பார்த்து சிரித்துக்கொண்டே சென்று விட்டனர். எனினும் அதிகமானோர் முகம் சுளித்தனர். மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண்களை மூடி மறைத்துக் கொண்டு சென்றனர். இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
விமான நிலையத்தின் கணினியை ஹேக் செய்து ஆபாசப்படங்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது இது தொடர்பில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.