நடிகை பிரியா வாரியர் ஆபாச கமெண்ட் அடித்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இவர் தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் படங்களை நடித்து வருகிறார். படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
அது மட்டுமின்றி அவர் ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் ரிப்ளே செய்து வருகிறார். இந்நிலையில் தன்னைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்த ஒரு நபருக்கு பிரியாவாரியர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஏன் நீ உன்னுடைய உண்மையான ஐடியில் இருந்து கமெண்ட் செய்யாமல் போலி ஐடியில் கமெண்ட் செய்கிறாய். உனக்கு தைரியம் இல்லையா என்று கேட்டு பதிலடி கொடுத்துள்ளார் பிரியா வாரியார்.