Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ…. DOWNLOAD….. WATCH…. SHARE….. செய்த வாலிபர்….. நெல்லை கைது…..!!

திருநெல்வேலி அருகே சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம்  களக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜவகர் அலி. இவர் சேரன்மகாதேவி சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு சீட்  தைத்து கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது செல்போனில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்தும், அதை பார்த்தும், பின் மற்றவர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிர்ந்தும்  வந்துள்ளார்.

இதனை தொழில்நுட்பப் பிரிவின் மூலம் கண்டறிந்த காவல்துறையினர் அவர் இருக்கும் இடத்தை டிராக் செய்து அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறப்பட்டதாவது, தொடர்ந்து ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு  வருகிறார்கள். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |