Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது பெயரில் ஆபாச வீடியோ லீக்”…. எப்படின்னு தெரியல… பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை ரேஷ்மா….!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, என்னுடைய சகோதரி எனக்கு திடீரென போன் செய்து உன்னுடைய செக்ஸ் வீடியோ வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது என்று கூறினார். இதைக் கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியானேன். என்னுடைய அம்மா இதை நேரடியாக கேட்காமல் என்னுடைய சகோதரியிடம் சொல்லி கேட்க சொல்லியுள்ளார். என்னுடைய சகோதரி என்னிடம் சொன்னவுடன் நான் அமெரிக்காவில் இருக்கிறேன். எனக்கு ஆளே கிடையாது. அப்படி இருக்கும்போது என்னுடைய வீடியோ எப்படி லீக் ஆக முடியும். உடனே அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வை என்று கூறினேன். அந்த வீடியோவை பார்த்த பிறகு தான் தெரிந்தது அது முழுக்க முழுக்க மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று.

இதைப் பற்றி என்னுடைய தந்தை மற்றும் அம்மாவிடம் சொல்லி புரிய வைத்து விட்டேன். என்னுடைய தந்தை ஒரு தயாரிப்பாளர். என்னுடைய சகோதரன் ஒரு நடிகர். என்னுடைய குடும்பம் ஒரு சினிமா பின்னணி குடும்பம் என்பதால் என்னுடைய பிரச்சனையை ஈசியாக புரிந்து கொண்டார்கள். இதுவே ஒரு ஏழை பெண்ணுக்கு நடந்திருந்தால் அந்த பெண் அப்போதே தற்கொலை வரை முடிவெடுத்து இருப்பார். ஆனால் என்னுடைய குடும்பம் இந்த பிரச்சனையை முடிந்த அளவுக்கு எளிமையாக சமாளித்து விட்டனர் என்று கூறினார். மேலும் நடிகை ரேஷ்மா பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |