Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம்” ஒரே நாள்… ஒரே மாவட்டம்…. 2 பேர் கைது…. தொடரும் போலீஸ் வேட்டை…!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம்  செய்த குற்றத்திற்க்காக தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர், அதை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வோர், சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கைது நடவடிக்கைகளும் தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி to பாலக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்துவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா என்ற வாலிபர் குழந்தைகளின் ஆபாசப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றிய குற்றத்திற்காக போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சமூக ஊடக பிரிவினர்  கோவை வாசிகளின் சமூக வலைதளங்களை கண்காணித்து வர அதே பகுதியில் மற்றொரு நபர் குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஐபி அட்ரஸை ட்ராக் செய்த பொழுது, அவர் திருப்பூர் மாவட்டம் பவானி நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பதும் கோவை தனியார்கல்லூரி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் கண்டறியப்பட்டது. மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சத்தியமூர்த்தியை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Categories

Tech |