சிரியாவில் வான் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாரான நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென தாக்குதலை ரத்து செய்தார்.
சிரியாவில் பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடைபெற்றது .அதில் முதல் தாக்குதல் முடிந்த 30 நிமிடத்தில் இரண்டாவது தாக்குதலை நிகழ்த்தும் நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன்தீடிரென அந்த தாக்குதலை நிறுத்துமாறு அறிவித்தார். ஏனெனில் இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு பெண்மணியும் சில குழந்தைகளும் உள்ளதாக அதிகாரிகளின் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு தெரியபடுத்தினார். இதனால் உடனடியாக இரண்டாம் தாக்குதலை ரத்து செய்து ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இது முதல் தாக்குதல் என்பதால் அதனை நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்று நடத்தவில்லை என்று பெரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செனட் சபையில் அமெரிக்கா ஜனாதிபதி அளிக்கப்பட்ட தன்னிச்சையான தாக்குதல் அதிகாரத்தை திரும்பப் பெற்று பிரேரணை அறிவிக்கப்பட்டது.
இந்தப் செனட் சபை பிரேரணை உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதிகள் தன்னிச்சையான தாக்குதல் முடிவை எடுக்க முடியாமல் போய்விடும் என்று வருத்தத்தில் உள்ளனர். இதனிடையில் அமெரிக்கா அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு மட்டுமல்ல நாடாளுமன்றத்திற்கு போரை ஏற்று அங்கீகரித்து நடத்தும் உரிமை உண்டு. ஆனால் தற்போது நாடாளுமன்றம் அந்த உரிமையை கைவிட்டது என்று தெரிவித்துள்ளது.