ராணுவத்திற்கு பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனங்களின் மீதும், மியான்மர் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகயிருக்கும் 8 தனிநபர்களின் மீதும் ஐரோப்பியக் கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசு மீண்டும் பொருளாதார ரீதியாக தடைகளை விதித்துள்ளது.
மியான்மரில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அந் நாட்டின் பல பகுதிகளில் போராடி வருகிறார்கள். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏற்கனவே பல விதமான பொருளாதார தடைகளை அதன் மீது விதித்துள்ளது. இந்நிலையில் தற்போதும் மீண்டும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும், இங்கிலாந்து அரசும் புதுவித பொருளாதார தடைகளை மியான்மர் ராணுவத்திற்கு விதித்துள்ளது.
அதாவது மியான்மர் ராணுவத்திற்கு மிகவும் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சுமார் 3 நிறுவனங்களின் மீது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி மியான்மர் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகயிருக்கும் 8 தனிநபர்களின் மீதும் ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசு பொருளாதார ரீதியா தடையை விதித்துள்ளது.