இந்த ஆண்டு பொருளாதாரதுறையில் சிறந்து விளங்கிய அமெரிக்கர்கள் மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம், பொருளாதாரம், அமைதி, மருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் பல்வேறு நாட்டினர் சாதனை படைத்து வருகின்றனர். அவ்வாறு சாதனை படைத்தவர்களை கௌரவிப்பதற்காக நோபல் பரிசு என்னும் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்காக அமெரிக்கா நிபுணர்கள் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனை டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு.இம்பென்ஸ் ஆகிய பொருளாதார நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் மூவரும் அமெரிக்காவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.