Categories
தேசிய செய்திகள்

மோடி கண்டுக்கல… டைட்டானிக் கப்பல் போல இருக்கு… ராகுல் கடும் தாக்கு …!!

பனி பாறைகளில் மோதி கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை போல நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார சரிவு, சீன ஊடுருவல் அனைத்து பிரச்சினைகளும் மக்களின் கவனத்திற்கு வரும் என்றும் பிரதமர் மோடி அவர் கேட்க விரும்பியதை மட்டும் இனிமேலும் தொடர்ந்து கேட்க முடியாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி வார விடுமுறை இன்றி வரும் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தொடர் நடைபெறும் போது காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அக்கட்சி தலைவர் திருமதி சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், திரு ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நாட்டில் நிலவும் பிரச்சினைகளை மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பது டைட்டானிக் கப்பலை போன்ற நிலையில் நாட்டை நிறுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடியும் ஊடகங்களும் நாட்டில் உள்ள பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பிரச்சினைகளை மறைக்க முடியாது என்றும் திரு  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |