ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என ஜேமி டைமன் கூறியுள்ளார்.
அமெரிக்கா நாட்டில் அடுத்து வரும் 6 முதல் 9 மாதங்கள் வரை பொருளாதார மந்தநிலை ஏற்படும். அந்நாட்டின் முதன்மை முதலீட்டு வங்கி நிறுவனமான ஜே.பி.மார்கன் சேஸ்-இன் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட அவ்வளவு மோசமாக இருக்காது.
இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், வட்டி விகித உயர்வு, ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என அவர் கூறியுள்ளார். இந்த பொருளாதார மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது என்றும், இதற்கான முன்னெச்சரிக்கையாக சந்தை விலைகளை மதிப்பிடு செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.