இந்தியாவில் சாதிவாரியான இட ஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. இந்த சாதிவாரியான இட ஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டு வருகிறது. அதாவது மாநில மக்கள் தொகைக்கு ஏற்பவும், மக்கள் முன்னேற்றம் மற்றும் மாநில அரசுகளின் விருப்பத்தின் பெயரிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியது. அதாவது, முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர்ஜாதி ஏழைகள் என்ற அடிப்படையில் பொருளாதர ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்காக அரசியலமைப்பு சாசனத்தின் 103 வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் முன்னேறிய வகுப்பு வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் 10% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று நடைமுறையில் உள்ளது.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு தரப்பு வரவேற்பு தெரிவித்தது. இதனால் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தரப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யூயூ லலித், நீதிபதிகள் தினேஷ், மகேஸ்வரி ரவீந்திர பட், திரிவேதி, பரித்வாலா அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 செய்த இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்கின் சுப்ரீம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.