நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட , கடனின் அளவு அதிகரித்து விட்டதாகவும் இதற்கு பட்ஜெட்டில் அரசு தீர்வு காண வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சியை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக அதிகரித்துள்ள அதே நேரத்தில் கடனின் அளவு 10.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டின் கடன் 53 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், 2019 செப்டம்பரில் இது 91 லட்சத்து ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மொத்தமாக கடனைத் திருப்பித் தந்தால் 40 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 68 ஆயிரத்து 400 ரூபாய் ஆக பெருகி உள்ளதாகவும் தெரிவித்தார், ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கோரி பெருமளவுக்கு நிதி நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.