Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்…. ஆவணப்படுத்தும் பணி…. அரசின் அனுமதி….!!

அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள யூனியனில் சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் கீழடியில் மண்பாண்ட ஓடுகள்,  தந்தத்தால் ஆன தாயக்கட்டை, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள் மற்றும் சேதமுற்ற சிறிய-பெரிய பானைகள் தங்க ஆபரணங்கள் உள்பட பொருட்கள் கிடைத்துள்ளது.

இதனைப் போல் கொந்தகையில் 20-க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் 10-க்கும் அதிகமான மனித உருவ எலும்புக்கூடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்ததில் உள்ளே இருந்த மனிதனின் தசை எலும்பு, கை-கால் எழும்புகள், சிறிய மண் கிண்ணம், விலா எலும்பு, மண்டையோடு, கருஞ்சிவப்பு கலர்களில் சிறிய பானைகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு சுடுமண் உறை, சேதமுற்ற நிலையில் உடைய சிறிய-பெரிய பானைகள் மற்றும் சிறிய-பெரிய நத்தை ஓடுகள் என பல பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கீழடியில் கண்டு பிடித்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. இப்பணியில் வரைபட மூலமாக குழியில் கிடைத்த பொருட்களின் அகலம் மற்றும் நீளம் குறித்து அளவீடு செய்யப்பட்டு ஆவணப்படுத்துதல் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் ஏழு கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு இந்த மாதம் முடிய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

Categories

Tech |