பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கமானது 6.8%த்தை எட்டியுள்ளது. குறிப்பாக எரிவாயு, உணவு, வசிப்பிடம் போன்றவற்றின் விலையானது உயர்ந்துள்ளது என்று சமீபக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரும் பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன” என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உற்பத்திகள் பாதிக்கப்பட்டு தேக்கமடைந்ததே பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.