மனைவியை போர்வையால் கட்டி தூக்கி சென்று அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்த கணவரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கணவர் ஒருவர் மனைவியை போர்வையால் கட்டி ஏடிஎம்-மிற்கு தூக்கிச்சென்று அவரின் சொந்த பணத்தை திருடிச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் ஏடிஎம் அருகே பெண் ஒருவர் தனிமையில் தவித்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போர்வையால் கட்டிப் போடப்பட்ட பெண்ணினை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தான் வீட்டில் இருக்கும் போது கணவர் பணத்திற்காக தன்னுடன் சண்டையிட்டு படுக்கை போர்வையின் மூலம் ஒயரால் தன்னை கட்டி காரில் தூக்கிச்சென்று ஏடிஎம்மில் உள்ள என்னுடைய பணத்தை அதிக அளவு எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க வாரண்ட் பிறப்பித்து அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.