சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது.
தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கொரானா தொற்று உள்ளவர்கள் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ வெளியேறும் வைரஸ் செல்போன் திரையில் 7 நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என இலண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளது.
செல்போன் திரையை தினமும் பலமுறை துணியால் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் வைரஸ் தொற்றை நீக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் படுக்கையறை மற்றும் கழிவறைகளிள் அதிகம் காணப்படுவதால் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.