தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் தமிழகம் முழுவதும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் அதே மாவட்டத்தில் அவர்களுக்கு பணி கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30. மேலும் விரிவான விவரங்களுக்கு appost. In என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.