நிர்வாண புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் சிலர் ஆண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது அவர் தமிழில் “கொட்டேஷன் கேங்க் என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியாமணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரசிகர் ஒருவர் பிரியாமணியிடம் நீங்கள் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள் என்று கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பிரியாமணி, முதலில் உனது தாய், சகோதரியிடம் இதைப் போய் கேளு. அதன் பிறகு நான் பதிவிடுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். பிரியாமணியின் இந்த சரியான பதிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.