Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் கடன் பெற?… இதை மட்டும் பண்ணுங்க போதும்…. இதோ உங்களுக்கான தகவல்….!!!!

ஏராளமான கிராமப்புற மக்கள் போஸ்ட் ஆபிஸில் கணக்கு துவங்கி அவர்களால் முடிந்த தொகையை முதலீடு செய்து நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர். மக்களின் வசதிக்கேற்றவாறு போஸ்ட் ஆபிஸ் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது போஸ்ட் ஆபிஸ் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பலன்களை அளித்து வருகிறது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச்சேவை உட்பட பல்வேறு வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளவோ மற்றும் டெபாசிட் செய்துகொள்ளவோ முடியும். இவற்றில் வரம்புகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த திட்டம் பிற வங்கிகளைப் போன்றே உங்களுக்கு வீட்டிலிருந்தபடி பல்வேறு சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்திட்டத்தில் நீங்கள் கடன் உதவியும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் அனைத்து வித கட்டணத்திற்கு கேஷ்பேக் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக உங்களுக்கு டெபிட் கார்டுகளும் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸில் இந்த சேமிப்பு கணக்கை 10 வயதுக்கு அதிகமான அனைவரும் திறந்துக்கொள்ளலாம் அவ்வாறு கணக்கை துவங்கும்போது ரூபாய்.149 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மேலும் வருடந்தோறும் ரூ.99 மற்றும் ஜிஎஸ்டி செலுத்தவேண்டும். கணக்கை திறக்கையில் நீங்கள் ரூபாய்.200 டெபாசிட் செய்ய வேண்டியது அவசியம்  ஆகும். இந்த திட்டத்தில் சேருவதற்கு நீங்கள் கேஒய்சி செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Categories

Tech |