Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸ்”…. 1500 ருபாய் சேமித்தால் 30 லட்சம் ரிட்டன்ஸா?…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

அஞ்சலகத்தில் சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் மக்கள் சேமிப்பின் பயனை உணர தொடங்கினர். பல பேருக்கு அந்த ஊரடங்கு காலத்தில் சேமிப்பி பணம் மட்டுமே உதவியாக இருந்தது. அதனால் தற்போது ஏராளமான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ரிஸ்க் இன்றி முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் தற்போது அஞ்சலகம் கிராம் சுரக்‌ஷா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் மாதத்திற்கு 1500 ரூபாய் முதலீடு செய்யும்போது 33 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெறலாம். ஆகவே அஞ்சலத்தின் கிராம சுராக்ஷ சேமிப்பு திட்டம் தொடங்க விரும்புவோரும் வயது 19 வயதிலிருந்து 55 வயதிற்குள் இருக்க வேண்டும். நீங்கள் 19 வயதில் இக்கணக்காய் தொடங்கினால் அடுத்த 55 வருடங்களுக்கு ரூ.1515 முதலீடு செய்து 31.60-ஐ மெச்சூரிட்டி பலனாக திரும்ப பெறலாம். மேலும் ரூபாய் 1463-ஐ 58 வருடங்களுக்கு சேமித்தால் 58 ஆண்டுகள் முடிவில் ரூ. 33.40 லட்சத்தை ரிட்டர்ன்ஸாக பெற முடியும்.

இதில் 60 ஆண்டுகளில் ஒரு நபர் ரூ. 1411-ஐ சேமித்தால் சேமிப்பு காலத்தின் முடிவில் ரூ. 34.60 லட்சம் பாலிசிதாரருக்கு கிடைக்கும். இத்திட்டத்தின் குறைந்தபட்சமாக பலனே ரூ. 10 ஆயிரத்தில் இருந்து 10 லட்சம் வரை இருக்கும். இதற்கிடையில் கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுக்கு இந்த பணம் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு சலுகையாக பிரிமியம் தொகையை முழுமையாக கட்ட விரும்புபவர்கள் 12 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ கூட விருப்பத்தின்படி செலுத்தலாம். 3 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தை ரத்து செய்தால் எவ்வித பலன்களும் கிடைக்காது.

Categories

Tech |