தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இந்திய அஞ்சல் துறை பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிக முதலீடுகளை செலுத்த தொடங்கினர். மேலும் இந்த சேமிப்பு திட்டத்தின் மூலமாக குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலம் அதிக வட்டிகளை பெற முடியும்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சேமிப்பு திட்டங்களான ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப் செல்வ மகள் போன்றவை இருக்கிறது. இந்த சேமிப்பு திட்டத்திற்கு ஆன்லைன் வழியாக மாதத் தொகை செலுத்தலாம் என்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதற்கு முதலில் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை தொடங்க வேண்டும். இந்நிலையில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் டிஜிட்டல் முறையில் மாத தொகையை செலுத்துவது குறித்து விரிவாக காணலாம். இதற்கு முதல் கட்டமாக மொபைல் பேங்கிங் என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன்பின் அதனுள் 4 இலக்க MPIN -ஐ உள்ளீட்டு எண்ணை அளித்து தங்கள் கணக்கில் நுழைய வேண்டும். அடுத்ததாக DOP சேவைகள் என்பதை கிளிக் செய்து பின் “சுகன்யா சம்ரித்தி கணக்கு” என்பதை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிட வேண்டும். பின் வைப்பு தொகையை உள்ளிட்டு “பணம்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். செலுத்த வேண்டிய தொகையை உறுதிசெய்து உறுதிப்படுத்து என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மாத தொகையை செலுத்தியதற்கான செய்தி பெறப்படும்.