Categories
பல்சுவை

“இந்தியாவில் இதுவரை பதவி வகித்த 13 குடியரசுத் தலைவர்கள்”…. அவர்களைப் பற்றிய செய்தி தொகுப்பு..!!

இந்தியாவின் இதுவரை பதவி வகித்த 13 குடியரசுத் தலைவர்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக 1950ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இரண்டு முறை குடியரசுத் தலைவரால் இவர்தான் இந்தியாவில் மிக நீண்ட காலம் அந்த பதவியில் இருந்தவர்.

1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது குறிப்பிடதக்கது.

1967 ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரை பதவி வகித்த ஜாகிர் உசேன் இஸ்லாம் மதத்தை சேர்ந்த முதல் குடியரசுத்தலைவர். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் காலமாகிவிட்டார்.

இதை அடுத்து நடந்த தேர்தலில் வி.வி.கிரி வெற்றிபெற்று 1969ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தார். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட கட்சிகளின் ஆதரவோடு கிரி வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் இரண்டாக உடைவதற்கு 1969ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

1974ஆம் ஆண்டு குடியரசு தலைவராக வெற்றி பெற்ற பக்ருதின் அலி அகமது வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்த முதல் குடியரசு தலைவர். இந்தியாவில் நெருக்கடி நிலை அப்போது பதவியில் இருந்தவர் இவர்தான். தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே 1977ஆம் ஆண்டில் பக்ருதீன் அலி காலமானார்.

1969 ஆண்டு வி வி கிரியிடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி 1977ஆம் ஆண்டில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் போட்டியின்றி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சாதனை இதுவரை முறியடிக்க படாமலேயே இருக்கிறது.

1982ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கியானி ஜெயில் சிங் சீக்கிய இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசு தலைவர். 1987ம் ஆண்டு வரை பதவியில் இருந்த இவரது பதவிக் காலத்தில்தான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்தது, மற்றும் இந்திரா காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் நடந்தன.

1987 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் குடியரசுத் தலைவரானார். காமராஜர் ஆட்சியில் தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தவர் வெங்கட்ராமன்.

1992ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சங்கர் தயாள் சர்மா வெற்றி பெற்றார். மத்திய அமைச்சர் மற்றும் ஆந்திரா பஞ்சாப் மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்தவர்.

1997ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக கே ஆர் நாராயணன் தலித் இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர். அறிவியல் மற்றும் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சீனா,
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதராகப் பணியாற்றியவர்.

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏவுகணை விஞ்ஞானியான டாக்டர் அப்துல் கலாம் வெற்றி பெற்றார். மக்கள் ஜனாதிபதி எனப் பாராட்டப்படும் அப்துல்கலாம் மாணவர்கள் மிகுந்த அன்பு கொண்டவர். இந்தியாவில் முதல் பிரம்மச்சாரி குடியரசுத் தலைவரும் இவரே.

2007ஆம் ஆண்டில் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் பொறுப்பேற்றார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்தவர்.

இதை தொடர்ந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் பிரணாப் முகர்ஜி 2012ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரானார். நீண்டகாலம் மத்திய அமைச்சராக இருந்த இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் பேராசிரியராகவும்,பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர்.

Categories

Tech |