சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டாகவும், நல்ல வருமானம் கிடைக்கும் திட்டங்களாகவும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அனைவருக்கும் சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு செய்வதற்கு எப்படி பல வழிகள் இருக்கிறதோ அதேபோல அதனை சேமிக்கவும் வழிகள் இருக்கிறது. அந்த வகையில் ஒரு சிறந்த வழி தான் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம். இதில் பலருக்கு போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருந்து அதில் பணம் கட்டாமல் இருப்போம். ஏனென்றால் அதற்கு முதல் காரணம் போஸ்ட் ஆபீஸ் செல்வதற்கு நேரமில்லை என்பதாக கூட இருக்கலாம்.
நாம் பணத்தை செலவிட செய்யும் நேரத்தை பணத்தை சேமிப்பதற்கு கொடுக்கிறோமோ? என்று கேட்டால் கேள்விக்குறிதான். ஏனென்றால் நாம் போஸ்ட் ஆபீஸ் சென்று பணம் போடுவதற்குள் நமது கையில் இருக்கும் பணம் ஏதாவது ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இப்படி இருக்கும் போது போஸ்ட் ஆபீஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டில் இருந்தபடியே போஸ்ட் ஆபீஸ் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
இனி போஸ்ட் ஆபீஸ் கணக்குகளை ஈசியாக ஆன்லைன் மூலமாக கீழ்காணும் வழிமுறைகளில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
1.NEFT மூலம் எந்த ஒரு வங்கிக் கணக்கில் இருந்து உங்களது SB, SSA, PPF கணக்கிற்கு சுலபமாக பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
2.IPPB கணக்கு மூலமாகவும் உங்கள் SSA, PPF, RD, PLI, RPLI கணக்குகளுக்கு பணப்பரிவினை சுலபமாக PPB ஆப் மூலமாக செய்து கொள்ளலாம்.
3.POSB -ன் mobile banking மூலம் உங்களது அனைத்து கணக்குகளையும் நீங்களே நிர்வகித்துக் கொள்ள முடியும். (SB, SSA, PPF, RD, PLI, RPLI, TD, NSC, KVP)
4. அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு ஏ.டி.எம் கார்டு வசதி உள்ளது.