இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் நாம் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் தற்போது முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்களின் முக்கிய தேர்வாக உள்ளன. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு தபால் துறை சிறந்த சேவையை புரிந்து, தற்போது வாடிக்கையாளர்களுக்கு அருமையான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது. இவ்வாறு வாடிக்கையாளர்கள், தபால் அலுவலகங்களுக்கு, பல்வேறு சேவைகளுக்காக அலைய வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்திய அஞ்சல் அலுவலகம் பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் வசதிக்காக, தொலைபேசி வாயிலாக குரல் மூலம் பதிலளிக்கும் வாடிக்கையாளர் சேவை (IVR) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கு இருந்தாலும், செல்போன்களில் இருந்து இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடு, ஏடிஎம் கார்டை தடை செய்தல் மற்றும் புதிய கார்டுகள் பெறுதல், பிபிஎஃப், என்எஸ்சி போன்றவற்றில் பெறப்பட்ட வட்டி போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைப் பெற 18002666868 என்ற இலவச எண்ணை இந்திய அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.