Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தபால் கண்காணிப்பாளருக்கு கொரோனா…. மூடப்பட்டது தபால் அலுவலகம்…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!

கோட்ட தபால் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தலைமை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைமை தபால் நிலையத்தில் பணியில் சேர்ந்த கண்காணிப்பாளருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் மற்றும் பணியின்போது ஆய்வுக்கு சென்ற திருவாரூர் மாவட்ட கொல்லுமாங்குடி, கீரனூர், பாவட்டக்குடி ஆகிய தபால் நிலையங்களுக்கு திங்கட்கிழமை வரை முழு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் செவ்வாய்க்கிழமை மீண்டும் தபால் நிலையம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |