கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு என்று பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் போஸ்ட் ஆபீஸில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. தற்போது இருக்கும் சூழலில் சேமிப்பு மட்டுமே போதாது அதையும் தாண்டி நல்ல பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றது. அதாவது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைத்து கணக்கு, தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு, தபால் அலுவலக மாத வருமான திட்டம் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்களை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது.
மேலும் மாதந்தோறும் வருவாய் பெறும் அடிப்படையில் மாதாந்திர வருமான திட்டம் இருக்கிறது. இதன் மூலமாக குறைந்த அளவு முதலீடு செய்து மாதந்தோறும் வட்டி தொகையை பெற முடியும். இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கு மூலமாக 4.5 லட்சம் வரை சேமிக்கலாம். அதேபோன்று கூட்டு கணக்கில் 9 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். மேலும் தனிநபர் கணக்கில் குறைந்தபட்ச தொகையாக 1,500 ரூ முதல் முதலீடு செலுத்தினால் 4.5 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.6% ஆகும். அதுமட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு இது ஒரு அருமையான திட்டமாகும்.
அதோடு வாழ்நாள் சேமிப்புக்கு இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பானது. இத்திட்டத்தில் Simple Interest மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இதன் மூலமாக கிடைக்கும் வட்டியானது திட்டத்தை தொடங்கிய தேதியிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு கொடுக்கப்படுகிறது. இந்த வட்டி தொகையானது முதலீடு தொகை முதிர்ச்சி அடையும் வரை வழங்கப்படுகிறது. வட்டி தொகையை மாதந்தோறும் எடுக்காவிட்டால் கூடுதல் வட்டி வழங்கப்பட மாட்டாது. இது குறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இந்திய தபால் துறையின் இணையதள பக்கம் அல்லது தபால் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.