Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸ்”…. குழந்தைகளின் கல்வி செலவுக்கு சேமிக்கும் பெற்றோர்களுக்கு…. இதோ சூப்பரான திட்டம்….!!!!

கொரோனா தொற்றினால் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தங்களின் பணத்தை செலுத்த தொடங்கினர். அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலானவை இருக்கிறது. அதிலும் மாதாந்திர வருமான திட்டம் என்பது பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் 10 வயது குழந்தைகளின் பெயரில் கூட கணக்கை தொடங்க முடியும்.

இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் வருவாயை பெற்று குழந்தைகளின் கல்வி செலவினங்களை எதிர்கொள்ள முடியும். இதன் காரணமாக பெற்றோர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் அதிக அளவு பயன்பெறுகின்றனர். மேலும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூ வரை முதலீடாகவும் செலுத்த முடியும். இந்த திட்டத்தின் மூலமாக கூட்டு கணக்கில் சேமிக்க முடியும். அவ்வாறு கூட்டு கணக்கில் சேமித்தால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். மாதாந்திர வருமான திட்டத்தின் மூலமாக கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு.

இத்திட்டத்தில் இணைவதால் வருடத்துக்கு 6.6 சதவிகிதம் வட்டி விகிதம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இந்த மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாகும். இவற்றில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 1,100 ரூபாய் வட்டி தொகையை பெற முடியும். 5 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் வட்டி தொகை 66,000 ரூபாய் வரை இருக்கும். ஆகவே முதலீடு தொகையை பொறுத்து வட்டி தொகை மாறுபடுகிறது. மாதந்தோறும் வட்டி தொகையை எடுக்காவிட்டாலும் கூடுதல் வட்டி வழங்கப்பட மாட்டாது. எனவே குழந்தைகளின் கல்வி செலவுக்கு சேமிக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

Categories

Tech |