இயக்குனர் வெங்கட் பிரபு தன்னைப் பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “மாநாடு” திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தற்போது மாநாடு படத்துடைய படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் திவீரமாக நடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சுரேஷ் காமாட்சிக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஏற்பட்ட தகராறால் மாநாடு படம் பாதியில் நின்று போனதாக செய்தி வெளியானது.
இந்த செய்தியை அறிந்த வெங்கட்பிரபு கோபத்தில் சமூக வலைத்தளத்தில் “எப்பா சாமி தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம். மாநாடு படத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேலைய நிம்மதியா செய்ய விடுங்கப்பா ” என்று பதிவு வெளியிட்டுள்ளார்.