சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அரை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகரில் சமூக பரவல் வந்து விட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.