Categories
சென்னை மாநில செய்திகள்

காவலர்களுக்கான தபால் ஓட்டு சென்னையில் நடைபெறுகின்றது…!!

பாராளுமன்ற தேர்தலுக்கான காவலர்களுக்கு  தபால் வாக்குப்பதிவு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

தமிழகத்தில் வருகின்ற 18_ஆம் தேதி நடைபெறும் நாடளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற இருக்கின்றது.இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கும் நிலையில் வாக்குசாவடியில் பாதுகாப்பு பணியில் நிற்கும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் வாக்களித்து வருகின்றனர்.

 

 

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது.வாக்களிப்பவர்கள்  தங்கள் தபால் வாக்குகளை சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்குட்பட்ட குறிப்பிட்ட பள்ளிகளில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு நந்தனம் கலைக்கல்லூரியில் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு சில அதிகாரிகள் வராததால்  8 மணிக்குத் தொடங்கியது. அதே போல மத்திய சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவும் எழும்பூரில் இருக்கும் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார்  2 மணி நேரம் கால தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கியது.

Categories

Tech |