Categories
தேசிய செய்திகள்

தபால் துறையின் மாத வருமானத் திட்டம்… அருமையான வாய்ப்பு… தவறவிடாதீர்கள்..!!

மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் வரும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வருகின்றது. அந்த வகையில் தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் குறித்து இதில் பார்ப்போம்.  தபால் துறையின் சிறந்த முதலீட்டு காண பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதில் இந்த மாத சேமிப்பு திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் நிலையான வட்டி தொகை வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் முதல் 4.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றால் அதிகபட்சம் மூன்று லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் தனியாகவும், கூட்டமாகவும் முதலீடு செய்யமுடியும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் முதலீடு செய்யும்போது வருடம்தோறும் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். அதற்கு முன்பாக முழு பணத்தையும் நீங்கள் எடுக்க நேர்ந்தால் மொத்த தொகையில் ஒரு சதவீதம் இழக்க நேரிடும்.

Categories

Tech |