தபால் துறை பேமெண்ட் வங்கியில் சிறுகடன் பெற நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற மக்களும் வங்கிச் சேவைகளைப் பெறும் வகையில் இந்திய தபால் துறையில் பேமெண்ட் வங்கி சேவையானது தொடங்கப்பட்டது. மேலும் தபால் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது india post பேமெண்ட் வங்கியை சிறு கடன்கள் வழங்கும் வங்கியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது.
அதன் படி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 100 நாட்களில் ஒரு கோடி கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் தனிநபர் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வழங்கும் இடமாகவும், பேமெண்ட் வங்கியை சிறு கடன்கள் வழங்குவதற்காக மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.