1971 ஆம் ஆண்டு போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 180 கிலோ மீட்டர் ஓடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் போர் நடந்தது. அந்த போரில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர். இந்த போருக்கு பிறகு மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டை இழந்து தற்போது வங்கதேசம் என அழைக்கப்படுகிறது. இந்தப் போரில் தியாகம் செய்த வீரர்களை அஞ்சலி செலுத்தும் வகையில் அந்தப் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர் 180 கிலோ ரிலே ஓட்டம் நடத்தினார்.
அதுவும் நள்ளிரவில், இந்த ஓட்டம் எல்லை பாதுகாப்பு வீரர்கள் ஒருவர் தொடர்ந்து ஒருவராக ஓடி ஓட்டத்தை நடத்தினர் இவர்கள் மொத்தம் ஓட்டத்தில் போர் நடந்த 180 கிலோமீட்டர் பகுதியே 11 மணி நேரத்தில் ஓடினர். இந்தியா பாகிஸ்தான் இடையே 1971ஆம் ஆண்டு நடந்த இந்தப் போர் டிசம்பர் 3ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடந்தது. இந்த போரின் தற்போதைய வங்கதேச பகுதியில் 3 லட்சம் முதல் 30 லட்சம் வரை மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த போரின் போது இந்தியாவிற்குள் கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக வந்தனர்.
अनूठे अंदाज़ में सीमा सुरक्षा बल @BSF_India ने मनाया विजय दिवस, हाथ में बेटन लेकर रात में सीमा पर दौड़े बीएसएफ के जवान, 11 घंटों में तय की 180 किलोमीटर की दूरी, 1971 के भारत-पाक युद्ध में विजय दिलाने वाले भारतीय सेना के नायकों को किया याद@PIBHindi @airnewsalerts @sudhakardas pic.twitter.com/YGdM7cQhMb
— डीडी न्यूज़ (@DDNewsHindi) December 15, 2020