பிரபல நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் மற்றும் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனால் தற்போது இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தங்களுக்குள் மோத ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோகளில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் போஸ்டர்களை ஒட்டியுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆட்டோவில் போஸ்டர் ஒட்டியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்நிலையில் அஜித் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்களின் புகைப்படத்தை ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இதேபோன்று விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள ஆட்டோவின் புகைப்படத்தை மற்றொருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த புகார்கள் அனைத்தையும் சென்னை போக்குவரத்து காவல்துறை கண்காணித்து வருவதாகவும், உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.