அதிமுக அமைச்சர்களுக்கும் இருக்கும் உள்கட்சி பூசல் தற்போது அம்பலமாகி கட்சி தலைமைக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜீ, ஆர்.பி உதயகுமார் இருவருக்கும் மாவட்டத்திற்குள் உரசல் இருப்பதாக தகவல் கசிந்து வந்தன. இதனால் கொரோனா நிவாரண நிதி வழங்குவதிலும் இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டி தற்போது உட்கட்சி பூசல் வெளிப்படுத்தி ஆளும் அதிமுகவுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் செல்லூர் ராஜுயை பாராட்டி அவரது ஆதரவாளர்கள் வால் போஸ்டர்கள் ஒட்டினர். இதனால் வெகுண்டெழுந்த ஆர் பி உதயகுமார் தொண்டர்கள் செல்லூர் ராஜ் ஆதரவாளர்களுக்கு போட்டியாக மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டினர். இது தற்போது வைரலாகி அதிமுக தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.