சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி தற்போது பெங்களூர் ஆஸ்பத்திரியில் கொரோனவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது. நேற்று தேனீ மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞரணி தலைவர் பண்ணை சின்ன ராஜா மற்றும் அமமுக இளைஞர் பாசறை தலைவர் புது ராஜா ஆகியோர் இணைந்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டரில் “தமிழ்நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் தியாகத்தின் மறுஉருவம் ராஜ மாதாவே வருக வருக” என வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றிருந்தன. ஆண்டிப்பட்டி நகர் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.