பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும். பசிக்கும் போது மட்டும் சாப்பிடவேண்டும். நொறுக்குத் தீனிக்கு பதிலாக பழங்கள், வெள்ளரி போன்ற காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது உங்களது கலோரி அளவை கட்டுப்படுத்த முடியும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச் சத்து நிறைந்ததாகவும், கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கவேண்டும். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பின்பு உங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அப்போது கூட தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் கூடாது. சாதாரணமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இரவு பசித்தால் காய்கறி மற்றும் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் தூங்கி எழுங்கள். சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதும், அதிகமாக தூங்குவதும் உடல் எடையை அதிகரிக்கும். தினமும் 8 மணிநேரம் தூங்குவது நல்லது. பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்கள் எடை கூடுகிறது. வயது அதிகரிப்பு மற்றும் இரட்டை குழந்தைகளை பராமரித்தல் போன்ற மன அழுத்தத்தின் காரணமாக இவை ஏற்படுகிறது. உங்கள் மனதை சாந்தமாக வைத்திருங்கள். உடல் எடையை கட்டுப்படுத்த முதலில் மன உறுதி வேண்டும்.