ஒரு வருட காலமாக தள்ளிப்போன திரை பிரபலத்தின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான வவ்வால் பசங்க திரைப்படத்தில் நடித்திருப்பவர் நடிகை உத்ரா உன்னி. அதுமட்டுமின்றி இவர் பழம்பெரும் நடிகையான ஊர்மிளாவின் மகள் ஆவார். இவருக்கும் நிதிஷ் நாயர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் கொரோனாவால் இவர்களது திருமணம் தள்ளிப் போனது.
இந்நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று இவர்கள் கேரளாவில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த திரை பிரபலங்கள் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.