நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மம்தா பேனர்ஜி மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய மருத்துவ தேர்வுகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் திமுக கட்சியின் சார்பில் மு க ஸ்டாலின் இதுகுறித்து ஏற்கனவே தேர்வை ரத்து செய்ய மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். தற்போது நீட், ஜெ.இ.இ, தேர்வுகளை ஒத்திவைக்கும்படி மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கொரோனா பரவல் நேரத்தில் நீட்,. ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் . மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது நமது கடமை என பதிவிட்டுள்ளார்.