பள்ளிகளில் உள்ள தேர்வு ரத்து செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக முக கவசம் மற்றும் கிருமிநாசினி நியாயமான விலையில் விற்க வேண்டும். கூடுதல் விலையில் கிடைக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை செயலாற்றுகின்றது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வாதிடப்பட்ட நிலையில், இது அனைத்தும் தொடர்பான விரிவான தாக்கல் செய்ய அறிக்கையை மார்ச் 23 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டுமென்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.