Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு ? அலுவல் ஆய்வில் அதிமுக மட்டும் பங்கேற்ப்பு …!!

இன்றோடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

தற்போது சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இதில் ஆளுங்கட்சி தரப்பில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள். எதிர்கட்சியான திமுக , காங்கிரஸ் ஆகியோர் ஏற்கனவே கூட்டத்தொடரை புறக்கணித்ததால் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை .

கொரோனா தாக்கம் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்கவேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், சட்டப்பேரவை புறக்கணிப்பையடுத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் 31ஆம் தேதியோடு , முன்கூட்டியே முடிக்கப்படும் என்று கடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுவதுமாக ஒத்திவைத்துவிட்டு வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்ற திமுக , காங்கிரஸ் , இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |