Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 வாரம் தான் இருக்கு…. பொங்கல் பானை செய்யும் பணி…. மும்முரமாக இறங்கிய தொழிலாளர்கள்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு செய்யப்படும் மண்பானைகள் அழகர் மலையின் அடிவாரத்தில் செய்யப்படுகிறது. அங்குள்ள மண்ணில் கலக்கும் நீரில் மூலிகை குணங்கள்  காணப்படுவதால் அங்கு செய்யப்படும் பானைகளுக்கு அவை தனிச்சிறப்பு சேர்க்கிறது. இதனால் தான் இந்த மண்பானைகளை வாங்குவதற்கு மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இப்பகுதிகளுக்கு பானைகளை கொள்முதல் செய்வதற்காக வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர்.

ஆனால் தொடர் மழை பொழிவு காரணமாகவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் பானை உற்பத்தியானது இப்பகுதியில் தேக்கம் அடைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் செய்யும் பணியானது தொடங்கியதையடுத்து  இங்கு விற்பனை செய்யப்படும் பானைகள் சுமார் 30 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட நிலையில் பண்டிகை காலங்களில் மட்டுமே விற்பனையாகும் மண்பாண்டங்கள் பிற நாட்களில் அதிகம் விற்கப்படுவதில்லை. எனவே இந்த பொங்கல் பண்டிகையில் இந்த மண் பாண்டங்களை விற்பனை செய்தால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என பானை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |