Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விமானத்தில் பறக்கும் மண்பானைகள்…. எங்கு அனுப்பப்படுகிறது தெரியுமா…? தொழிலாளர்களின் தகவல்…!!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுமார் 3500 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மண்பானைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து மலேசியாவிற்கு அனுப்புவதற்காக மண்பானைகளில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த மண்பானை 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது, சிங்கப்பூர், மலேசியா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வருகிறது. ஆனால் மழைக்காலத்தில் மண் பாண்டங்களை காய வைப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஆடர் எடுக்கும் போது இவ்வளவு நாள் கழித்து அனுப்புவோம் என முன்கூட்டியே சொல்லி விடுவோம். மேலப்பாளையம் குருச்சியில் தயாராகும் மண் பாண்டங்களில் 95% ஏற்றுமதி செய்வதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |